மதுபோதையில் சாரத்தியம் – யாழ் சென்ற இ.போ.ச பேருந்தின் சாரதி கைது!
Saturday, November 12th, 2022
மது போதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மற்றும் நடத்துனர் புளியங்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (11) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் இருந்து யாழ்பணம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்தினை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்துள்ளார்.
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் புளியங்குளம் பகுதியில் மாலை 6 மணியளவில் குறித்த பேருந்தை மறித்து சாரதியை பரிசோதித்துள்ளனர். அதன்போது சாரதி மதுபோதையில் இருந்ததையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.
பேருந்தை புளியங்குளம் காவல் நிலையத்திலும் சாரதி மற்றும் நடத்துனர் இருவரையும் பரிசோதனை செய்வதற்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
மீண்டும் வரி அதிகரிப்பு!
குருந்தூர் மலையில் அவர்கள் புத்த விகாரை கட்டியதற்காக வெடுக்கு நாறியில் நீதிமன்ற வழக்கை அவமதிக்க முடி...
வறட்சியான காலநிலையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சி - மக்களின் நீர் பாவனை அதிகரிப்பு - கா...
|
|
|


