மண் சரிவு: பல வீடுகள் சேதம்- 8 பேர் பலி!

Friday, May 26th, 2017

சிரற்ற காலநிலை காரணமாக களுத்துறை, புளத்சிங்கள, போகாவத்தை- தெல்பவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 4 பேரைக் காணவில்லை.நாட்டில் நிலவும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக மாத்தறை தெனியாய – மொரவக கந்த மற்றும் களுத்துறை – புளத்சிங்கள  போகஹவத்த – தெல்பாவத்த பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக பல வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பிரதேசத்திற்கு பயணிக்கும் சகல வீதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் கடற்படையினரும், விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனிடையே, இரத்தினபுரி ,கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மண் சரிவு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சப்புகஸ்கந்த   ஹெய்யந்துடுவ  பகுதியில் வீடொன்றில் மண்சரிவு இடம்பெற்றுள்ளது.இதில் சிக்கி 2 பெண்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Related posts: