இயற்கை அனர்த்தங்களால் 25 இலட்சம் பேர் இடம்பெயர்வு!

Saturday, October 7th, 2017

கடந்த 9 மாதகாலப்பகுதியினுள் நாடளாவியரீதியாக இடம்பெற்ற பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 25 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என சுற்றாடல் நீதித்துறை நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வருடாந்தம் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர் இந்த வருடத்தில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் ஏற்பட்ட பாரிய வரட்சி காரணமாக 19 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர்களில் 3 இலட்சம் பேர் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இந்த வருடத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மண்சரிவு காரணமாக 7 லட்சம் மக்கள் தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர்அத்துடன், இந்த அனர்த்தங்கள் காரணமாக சுமார் 300 பேர் உயிரிழிந்துள்ளனர். 2 ஆயிரத்து 500 வீடுகள் முற்றாக அழிந்ததுடன், 15 ஆயிரம் விடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: