மண்டைதீவில் சோகம்- சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!

Saturday, November 21st, 2020

யாழ்ப்பாணம், மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சோகச் சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) மற்றும் சார்வின் (வயது-5) ஆகிய சகோதரர்களே நீர் சேமிப்புப் கிடங்கினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சிறுவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Related posts: