மட்டக்களப்பில் தமிழர் பண்பாட்டின் பொங்கல் விழா 2017 – ஈ.பி.டி.பியின் ஜேர்மன் அமைப்பாளர் மாட்டின் ஜெயா பங்கேற்று சிறப்பிப்பு.

மட்டக்களப்பு, மெதடிஸ்த மத்திய கல்லூரியின் உழுதுண்டு வாழும் தமிழர் பண்பாட்டின் பொங்கல் விழா 2017 நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
மெதடிஸ்த மத்திய கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாட்டில் முதன்முறையாக இன்று காலை 8.00 மணியளவில் ஆரம்பமான பொங்கல் விழா நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில், செயலாளர் நாயகத்தின் இணைப்பாளரும், ஜேர்மன் பிராந்திய அமைப்பாளருமான மாட்டின் ஜெயா கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமாகி கல்லூரி வளாகத்தைச் சென்றடைந்த பண்பாட்டு ஊர்வலத்திலும் பங்கேற்றிருந்தார்.
பின்னராக கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வை ஆரம்பித்து வைத்த கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா, அங்கு இடம்பெற்ற பல்வேறு கலாசார, பண்பாட்டு நிகழ்வுகளையும் பார்வையிட்டிருந்தார்.
குறித்த பொங்கல் விழாவில், 07 வகையான பொங்கல், 17 வகை பாரம்பரிய பட்சணங்கள், கிராமிய விளையாட்டுக்கள் மற்றும் தமிழர் பண்பாட்டு நிகழ்வுகள் போன்றன இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|