மக்களது சாத்வீகப் போராட்டத்தை வன்முறையாக்க முயற்சித்ததன் அடிப்படையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கைது!

Wednesday, February 28th, 2018

மக்கள் நியாயமான முறையில் மேற்கொண்ட சாத்வீகப் போராட்டத்தை திட்டமிட்ட வகையில் வன்முறையாக மாற்றுவதற்கு முயற்சித்தமைக்காக வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுவாகல் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி குடியிருப்புக் காணிகளை கடற்படையினர் முகாம் அமைப்பதற்காக அளவீடு செய்கின்றனர் என்று  எதிர்ப்பு தெரிவித்து குறித்த பகுதி மக்கள் ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த போராட்டத்தை குறித்த மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் சுயநல அரசியலாக்கும் வகையில் உள்நுழைந்து வன்முறையை தூண்டிவிடும் வகையில் செயற்பட்டார் என குறித்த போராட்டத்தை மேற்கொண்ட மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் ரவிகரன்  இன்றையதினம் பொலிஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது.

Related posts: