உலகை அச்சுறுத்தும் கொவிட் -19 : பலி எண்ணிக்கை 1770 ஆக அதிகரிப்பு!
Tuesday, February 18th, 2020
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1770 ஐ தாண்டியுள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுஹானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொவிட் -19 வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொவிட் -19 வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொவிட் -19 வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுஹானில் இந்த வைரஸ் பாதிப்பால் வைத்தியசாலைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
சீனா முழுவதும் சுமார் 71,223 மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகின்றது.
Related posts:
மரக்கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் நியமிப்பு!
அரசில் இருந்து யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் - மூன்றில் இரண்டு பலத்தையும் அரசாங்கம் இழக்காது - அம...
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை!
|
|
|


