போக்குவரத்து மற்றும் சேவைக் கட்டணங்களில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, May 24th, 2022

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இரு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை விலைசூத்திரம் பயன்படுதப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல், கட்டணங்களைத் திருத்துவது குறித்து கலந்துரையாடுமாறும் போக்குவரத்துத் துறையிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்பதாக இன்று(24) அதிகாலை 03 மணிமுதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,  ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 82 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

338 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் புதிய விலை 420 ரூபாவாகும். ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 77 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

337 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் புதிய விலை 450 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 111 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 400 ரூபா வரையிலும்

சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 116 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 445 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுமென எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: