போக்குவரத்து சபைக்கு 1250 புதிய பஸ்கள் கொள்வனவு!

எதிர்வரும் 2017ம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபை ஆயிரத்து 250 புதிய பஸ்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாகசபையின் தலைவர் ரமல் சிறிவர்தன கொழும்பு பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
நீண்ட பெரிய ஆயிரம் பஸ்களும் சிறிய இருநூற்று ஐம்பது பஸ்களும் கொள்வனவு செய்யப்பட உள்ளது.பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பஸ்களை கொள்வனவு செய்வது குறித்து பகிரங்க விலை மனுக் கோரல் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தனியார் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்படும்: நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!
ஐக்கிய நாடுகளின் கடல் சார் மாநாட்டில் பிரதமர் !
சதோசவில் ரூ.15 விற்கும் முகக்கவசம் - ஒரு ருபாய் மஹபொல நிதியத்திற்கு – அமைச்சர் பந்துல குணவர்த்தன!
|
|