பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு!

Monday, July 25th, 2016

பத்தாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் என்.ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மூன்று மாத காலத்திற்குள் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை கோரி நேர்முகத் தேர்வுகளை நடாத்துமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தில் முதல் தடவையாக இவ்வாறு ஒரே தடவையில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி முதல் பொலிஸ் உப பரிசோதகர் பதவி வரையில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

சேவைக்காலம் மற்றும் திறமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதுடன், மாகாண மட்டத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படுவதனால் விரைவில் பதவி உயர்வு வழங்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: