பொலிசாருக்கு மக்களின் கௌரவத்தை வென்றெடுக்க முடிந்துள்ளது – அமைச்சர் சாகல ரட்ணாயக்க!

Monday, December 25th, 2017

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பொலிசாருக்கு மக்கள் கௌரவத்தை வென்றெடுக்க முடிந்ததாக சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்ணாயக்க தெரிவித்துள்ளார்.

பயிற்சியை பூர்த்தி செய்து 476 பொலிஸ் அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு உரையாற்றினார். 275 பொலிஸ் கான்ஸ்டபிள்களும், பெண் கான்ஸ்டபிள் ஒருவரும் இதில் இணைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

பொலிசை மீளமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பொலிஸ் பல்பலைக்கழகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. பொலிசார் பதவி உயர்வு தொடர்பான நெருக்கடிகளுக்கும் தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் சாகல ரட்ணாயக்க தெரிவித்தார்

Related posts: