சுகாதாரத் துறையின் முடிவுகளின் பின்னரே பாடசாலை மாணவர்கள் தொடர்பில் ஆலோசிக்கப்படும் – கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Saturday, August 22nd, 2020

பொதுக் கொள்கையின் அனைத்து துறைகளிலும் முடிவுகளை எடுக்க அரசாங்கம் நிபுணர்கள் அல்ல என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், சுகாதாரத் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே பாடசாலை மாணவர்கள் தொடர்பாக முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பரீட்சைகளுக்கான திகதிகளை நிர்ணயிப்பது குறித்து பேசிய கல்வி அமைச்சர், இது விரைவில் திட்டமிடப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதேவேளை தற்காலத்திற்கு பொருந்தும் வகையில் பாடசாலைப் பாடத்திட்டங்களை புதுப்பிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்று விரைவில் தயாரிக்கப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் முன்னர் தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: