பொருளாதார நெருக்கடி – மீள்வதற்காக இலங்கை முன்னெடுத்து வரும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!.

Tuesday, April 16th, 2024

பொருளாதார நெருக்கடியில் இருந்து, மீள்வதற்காக இலங்கை முன்னெடுத்து வரும் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருமான கென்ஜி ஒகமுரா உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


சமூக ஊடகங்களுக்கான வலவான சட்டக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரி...
யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்பாட்டால் 10 பேர் உயிரிழப்பு - இரண்டு மாத கால பகுதிக்குள் சிகிச்சை மை...
பதிவு செய்யப்படாத அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன் பதிவு ...