பொருளாதார நெருக்கடி நிலைமையினால் ஏற்பட்டுள்ள அழுத்தம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வீழ்ச்சியடையும் – மத்திய வங்கியின் ஆளுநர் உறுதி!

Thursday, November 25th, 2021

பொருளாதார நெருக்கடி நிலைமையினால் ஏற்பட்டுள்ள அழுத்தம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வீழ்ச்சியடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாதுறையினர் சந்தித்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் மத்திய வங்கியின் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நாட்டின் சகல துறைகளும் வீழ்ச்சியை சந்தித்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் கலந்துகொண்டுள்ளார்.

இதேவேளை

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் என்பவற்றை முறையே 5.00% மற்றும் 6.00% ஆக அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் திருந்துவோம் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு ...
ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் செவ்வாயன்று நிறைவுறுத்...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2025 இல் இணைவதற்கு வெளிமாவட்ட மாணவர்கள...