முல்லைத்தீவில் பதற்றம்: இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு!

Tuesday, August 14th, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான கடற்றொழில் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தினால் மீனவர்களின் பெறுமதியான 3 படகுகள், பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள், 8 வாடிகள் மற்றும 2 இஞ்சின்கள் உள்ளிட்ட மீனவர்களுக்கு சொந்தமான உடமைகள் தீகயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இதனிடடையே நேற்றைய தினம் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்திருந்த மீன்பிடித் துறை அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா தலைமைிலான குழுவினர் இப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தனர். இதன்போது  மக்கள் சட்டவிரோத  தொழில் தொடர்பில் முறையிட்டிருந்தனர் இதனடிப்படையில் அத்தகைய தொழில் நடவடிக்கைகளை உடன் நிறுத்துவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் சட்டத்திற்கு முரணான முறையில் மீன்பிடிக்கச் செல்ல சிலர் முற்பட்டபோது, அப்பகுதி மீனவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், போராட்டம் நடத்தி அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் இடம்பெற்ற  பின்னர் இவ்வாறு தமிழ் மீனவர்களின் பெறுமதியான உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: