பொதுவான வேலைத்திட்டங்கள் தனி ஒருவரது முடிவாக இருப்பதை ஏற்கமுடியாது – யாழ்.மாநகர சபை உறுப்பினர் இர செல்வவடிவேல் வலியுறுத்து!

Wednesday, December 1st, 2021

பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்கும்போது அது சார்ந்த முடிவையோ அல்லது தீர்மானமத்தையோ எடுக்கும்போது அது தனி ஒருவரது முடிவாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் இரா செல்வவடிவேல் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாநகர சபையில் நெற்றையதினம் நடைபெற்ற சபை அமர்வின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலான விவாதங்கள் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

45 பேர் கொண்ட ஒரு மக்கள் சபையாக யாழ்ப்பாணம் மாநகர சபை காணப்படுகின்றது. இந்த 45 பேரும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் இங்கே இடம்பெறும் நிகழ்வுகள், விடயங்கள் தொடர்பில் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து கலந்து பேசி முடிவு எடுபக்கப்படுவது கிடையாது. தனி ஒருவரது சார்பாக முடிவை எடுத்த பின்பே அவை அறிவிக்கப்படுகின்றது.

இது எம்மீது திணிக்கப்படும் ஒரு செயலாகவே அமைகின்றது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக ஆரியகுளம் திறப்பு விழா நிகழ்வு தொடர்பில் உறுப்பினர்களுக்கே தற்போதுதான் தெரியும். நிதியை வழங்கியதற்காக அவரது பிறந்தநாள் என்பதறகாக அதனை உடன் செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது.

இதேபோல நாவலர் சிலை திறப்புத் தொடர்பிலும் ஏதும் எமக்கு தெரியாது. அதேநேரம் அந்த சிலையின் வடிவம் தொடர்பிலும் மாறுபட்ட கருத்தே உள்ளது.

இவ்வாறுதான் செங்கோலை கையேற்பது தொடர்பிலும் அன்று காலைதான் அறிவிக்கப்படுகின்றது. இங்கே என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. முடிவை எடுத்தபின்னர் அதனை ஏன் அறிவிக்க வேண்டும் என கெள்வி எழுப்பிய இரா செல்வவடிவேல்  இவ்வாறான செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனிடைமயே மற்றுமொரு விவாத பொருளாக நேற்றைய சபை அமர்வில் காணப்பட்ட வர்த்தக சங்கத்தினரது கடை வாடகை முற்பண விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த உறுப்பினர்  இரா செல்வவடிவேல் கூறுகையில் –

வர்த்தக சங்கத்தினரது நிலைமைகளை அவதானத்தில் கொண்டதற்கு அமைவாக அவர்களுக்கு 8 மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் மீதி முற்பணத் தொகையை அடுத்துவரும் மூன்று வருடங்களுக்குள் படிப்படியாக செலுத்தவதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: