பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பே கொரோனாவை கட்டுப்படுத்தும் சிறந்த வழிமுறை – யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி வலியுறுத்து!

Sunday, May 23rd, 2021

அனைத்துப் பொதுமக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா தொற்றினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியுமென யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த ஊடக சந்திப்பில் பிரியந்த பெரேரா மேலும் கூறுகையில் –

“கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக நாம் முன்னெடுத்துள்ளோம். மேலும் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு, இராணுவத்தினர் பல்வேறு வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் உரிய முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பாடுகளை முன்னெடுங்கள். இவ்வாறு அனைவரும் செயற்படுவார்களாயின் விரைவாக கொரோனா வைரஸ் தொற்றினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: