இலங்கையுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத சீனா ஆர்வம்!

Friday, April 1st, 2016

இலங்கையுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்த சீனா ஆர்வமாக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனாவுக்கான விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆர்வமாக இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

முன்னைய ஆட்சியில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவிய நெருங்கிய நட்புறவு நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் சற்று விரிசலுக்கு உள்ளாகியிருந்தது. எனினும் மேற்கு நாடுகளின் நிதியுதவிகள் இலங்கைக்கு எதிர்பார்த்த அளவு கிடைக்காத நிலையில், இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மீண்டும் சீனாவின் உதவியை இலங்கை நாடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை முன்னிட்டு எதிர்வரும் 6ம் திகதி முதல் 9ம் திகதி வரை சீனப் பிரதமரின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது இருதரப்பு பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான நெருக்கமான உறவுகளை மீண்டும் வளர்த்தெடுப்பதில் இருநாட்டின் அரசியல் தலைவர்களும் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

Related posts: