பொதுநலவாய அமைப்பின் செயலாளர் இலங்கையில்!

Wednesday, August 1st, 2018

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நான்கு நாள் பயணமாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் இன்று மதியம் இலங்கை வந்தடைந்தார்.

அவருடன் நான்கு பேர் அடங்கிய தூதுக்குழுவினரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.

இந்த விஜயத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்திக்கவுள்ளார். அத்துடன் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பொதுநலவாய அமைப்பின் வர்த்தக செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

Related posts: