இலங்கையில் சொகுசு ரயில் அறிமுகம் – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க!

Friday, November 24th, 2017

கொழும்பில் உருவாகியுள்ள போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வாக சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இத பிரித்தானியாவினால் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் செயற்படுத்தப்படும் பிரதான ரயில் சேவை இதுவென பெருநகர மற்றும்மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மற்றும் தனியார் பிரிவின்தலையீட்டில் மேற்கொள்ளப்படும் சூழலுக்கு நெருக்கமான இந்த போக்குவரத்து சேவை நாட்டிற்கு புது அனுபவமாக இருக்கும் என அவர்குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 2035 ஆம் ஆண்டு வரையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் முன்நடவடிக்கையாக கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்குஇலகு ரயில் கட்டமைப்பு ஒன்று அவசியமாகும். அதற்காக 7 இடை வழிகளை அடையாளம் காண முடிந்துள்ளது. கடுவெல, மாலபே,பத்தரமுல்ல, பொரளை ஊடாக புறக்கோட்டை வரையிலும், அங்கிருந்து கொள்ளுப்பிட்டிய வரையிலும் இடைவழிகள் இரண்டிற்கு ஜப்பான்அரசாங்கத்துடன் இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முதற்கட்ட நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளது. கடுவலயில் இருந்து மாலபே, பத்தரமுல்ல ஊடாக கோட்டை வரை இலகுரயில் கட்டமைப்பு தொடர்பான இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: