பேருந்து கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை.!

Friday, May 13th, 2016
தேசிய அரசாங்கத்தினால் பெறுமதி சேர்வரி (வற்வரி) அதிகரிக்கப்பட்டதனையடுத்து பேருந்துகளை உரிய வகையில் பாராமரிப்பது தொடர்பில் பேருந்து உரிமையாளர்களுக்கு செலவினங்கள் அதிகரித்துள்ளமையினை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜீலை மாதம் பேருந்து  கட்டணத்தை அதிகரிக்க எதிர்ப்பார்ப்பதாக பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
பேருந்து கட்டணங்கள் தொடர்பிலான புதிய சூத்திரமொன்றை இலங்கை போக்குவரத்து அணைக்குழுவுக்கு சமர்பிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தேசிய அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வற் வரி காரணமாக பேருந்து கட்டணங்களின் அதிகரிப்புக்கு பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜயரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts: