பெற்றோல் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் இணைந்து எரிபொருள் மோசடி – மாஃபியாக்களால் தாம் பாதிக்கப்படுவதாக மக்கள் கவலை!
Monday, July 4th, 2022ஹற்றன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது இடம்பெற்று வரும் எரிபொருள் மாஃபியா காரணமாக இப்பிரதேசத்தில் வாகன உரிமையாளர்கள் பலர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் தனியார் பஸ் சாரதிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரியும் ஒரு சிலருடன் இணைந்து இந்த மாஃபியாவை நடத்துவதாக பல வாகனச் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் அப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு டீசல், பெற்றோல் கிடைக்கும் போது, எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பணிபுரியும் சில ஊழியர்களின் உதவியுடன் வாகனங்களுக்கு அதிக எரிபொருளை நிரப்பிவிட்டு, மீண்டும் வரிசையில் நின்று அதிக எரிபொருளை பெற்று வருகின்றனர். பின் அந்த எரிபொருளை அதிக விலைக்கு விற்பதாக மக்கள் கூறுகின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் இந்த வாகனங்களுக்கு வரம்பில்லாமல் எரிபொருளை வழங்கி, அதன்பின்னர் அதை ஒரு லீற்றர் ஆயிரம் முதல் ஆயிரத்து இருநூறு ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்வதாக மக்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|