பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் விவகாரம்: இன்றுமுதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

Tuesday, December 4th, 2018

அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்றுமுதல்(04)  பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெருந்தோட்ட தொழிலாளர்களது வேதனம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் அவை தோல்வியடைந்தமையால் இன்றுமுதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.