பெரிய வெங்காயத்திற்கு சில்லறை விலை நிர்ணயம்!

Monday, February 24th, 2020

ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை 190 ரூபாவாக அறிக்கப்பட்ட நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மெனிங் சந்தையில் பிரதான வர்த்தக சங்கத்தின் பிரதான அமைப்பாளர் அனில் இந்திரஜித் இதனை தெரிவித்தார். அதன்படி இன்றைய தினம் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 170 ரூபாவாக காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 160 தொடக்கம் 165 ரூபாவாக காணப்படுவதாக அந்த மத்திய நிலையத்தின் தலைவர் ஷாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இன்றைய தினம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 140ஆக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாண சின்ன வெங்காயம் தம்புள்ளை சந்தைக்குக் கொண்டுவரப்படுவதால் அதன் விலை 300 ரூபாவாக குறைவடைந்துள்ளதாகவும் ஷாந்த ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

Related posts: