பெப்ரவரி முதல் மீண்டும் 20 ரூபாவாகும் லொத்தர் சீட்டுக்கள்!

Saturday, January 28th, 2017

தேசிய லொத்தர் சபையினால் அச்சிட்டு விநியோகிக்கப்படும் அனைத்து விதமான அதிஷ்ட இலாபச் சீட்டு (லொத்தர்) வகைகளும் 20 ரூபா விலையில் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் என்று தேசிய லொத்தர் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 01ம் திகதி முதல் அனைத்து விதமான லொத்தர் வகைகளும் 30 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக அவற்றின் விலையை 20 ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1155131515Lottr22

Related posts: