புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடமாடும் விற்பனைச் சந்தை!

Thursday, April 12th, 2018

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடமாகாண உள்ளுர் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் நடத்தும் நடமாடும் விற்பனைச் சந்தை நேற்று முன்தினம் யாழ்.நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அனுசரணையுடன் இந்த உள்ளுர் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான விற்பனைக்கூடம் வீரசிங்கம் மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது.

கூட்டுறவு உற்பத்தியாளர் விற்பனை சங்கங்களின் உற்பத்திப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடமாடும் விற்பனைச் சந்தை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts: