புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விஷேட பேருந்து ​சேவை!

Thursday, April 4th, 2019

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விஷேட பேருந்து போக்குவரத்து சேவையை மேற்கொள்ள இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 08ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இந்த விஷேட பேருந்து சேவை மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை கால அட்டவணை முகாமையாளர் சஜீவ திலுக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயணிகளின் நலனுக்காக 1487 மேலதிக பேருந்துகள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தெற்கு அதிவேக வீதி மற்றும் கட்டுநாயக்க அதிவேக வீதியிலும் குறித்த காலத்தில் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை கால அட்டவணை முகாமையாளர் சஜீவ திலுக்‌ஷ தெரிவித்துள்ளார்.

Related posts: