93% கொவிட் மரணங்கள் தொற்றா நோயாளிகளுக்கே ஏற்பட்டுள்ளன; பாதுகாக்க பிரத்தியேக ஏற்பாடுகள் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, November 11th, 2020

தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கொவிட் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் 93 வீதமானவற்றுக்கு காரணம் – ஏற்கெனவே தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதாகும் என்பதனை வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருதய நோய், நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மிக வேகமாக கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகின்றனர்.

பெரும்பாலானவர்கள் நோய் அறிகுறிகள் இன்றியே மரணத்தை தழுவியுள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் போது அவர்கள் கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தொற்றாத நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாப்பதற்கும்,

கொவிட் நோய்த்தொற்றிலிருந்து அவர்கள் விலகியிருப்பதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் உடனடியாக வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கொவிட் நோய்த்தொற்றுடையவர்கள் அதிகம் இனம்காணப்பட்டுள்ள மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கான பயணங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நான் அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: