புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோ அரிசியை 97 ரூபாவுக்கு வழங்க தீர்மானம் – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!
Friday, February 19th, 2021எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் ஒரு கிலோ அரிசி 97 ரூபா என்ற உத்தரவாத விலைக்கு வழங்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மேலும் நெல் அறுவடை இடம்பெறும் மாவட்டங்களில் உத்தரவாத விலையின் கீழ், நெல் கொள்வனவு செய்யப்படுகிறது. அதேபோல விவசாயிகளுக்கு உரமானியமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் நெல் கொள்வனவு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கொண்டுவரும் பிரசாரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நெல்லை கொள்வனவு செய்வதற்கென அரசாங்கம் 23 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருக்கிறது. வரலாற்றில் நெல் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட மிகக் கூடுதலான தொகை இதுவாகும் என்றும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|