புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு!

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 6 புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த மதிப்பாய்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த புதுப்பிக்கத்தக்க திட்டங்களுக்காக அரசாங்கத்தின் அனுமதி பெறுதல், காணி கையகப்படுத்துதல், மின் இணைப்புகள் அமைத்தல், மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் நிதித் தேவைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பெண்கள் பன்னாட்டு மாநாடு ஜீலை 21 யாழ்ப்பாணத்தில்!
இன்று நள்ளிரவுமுதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு!
இன்றுமுதல் பொதுமன்னிப்பு காலம் ஆரம்பம் - பாதுகாப்பு அமைச்சு!
|
|