இன்றுமுதல் பொதுமன்னிப்பு காலம் ஆரம்பம் – பாதுகாப்பு அமைச்சு!
Wednesday, February 5th, 2020
பல்வேறு காரணங்களினால் சட்டத்திற்கு முரணானவாறு முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்கள், அதில் மீண்டும் இணைவதற்கும் அல்லது சட்ட ரீதியாக விலகுவதற்குமான பொதுமன்னிப்பு காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது.
அதன்படி எதிர்வரும் 7 நாட்களுக்கு இந்த பொது மன்னிப்பு காலம் அமுலில் இருக்கும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து விலகிச் சென்றவர்களுக்காக இந்த பொது மன்னிப்பு காலம் ஏற்படையதாகும்.
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால், இந்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசியலமைப்புச் சபையில் இருந்து விலகுவது குறித்து தீர்மானிக்கவில்லை - தினேஷ் குணவர்தன!
மின் துண்டிப்புக்கு மின்சக்தி அமைச்சு பொறுப்புக்கூற வேண்டும் என்று உறுதியானால் பதவி விலக தயார் - மின...
அரச நிறுவன பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிக்க பெப்ரவரி 10 ஆம் திகதிவரை அவகாசம்!
|
|
|


