இலங்கையின் அபிவிருத்திக்கான நிதியுதவியை அதிகரித்துள்ள தென்கொரியா!

Thursday, March 16th, 2017

இலங்கையின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் நிதியுதவியை தென்கொரியா 30 கோடி அமெரிக்க டொலர்களில் இருந்து 50 கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்கொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் யுன்க் சே-யுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர இடையிலான பேச்சுவார்த்தை நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் தென்கொரிய அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். வரட்சிக்கு நிவாரணமாக தென்கொரியா இரண்டு லட்சம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கும் விரும்பம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முதலீடுகளை மேற்கொள்வதற்கான விடயங்களிலும் தென்கொரிய அமைச்சர் கவனம் செலுத்தினார்.

 தென்கொரியாவில் இலங்கையர்களுக்கு கூடுதலான தொழில் வாய்ப்பு, மாணவர்களுக்கு தென்கொரியாவில் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான புலமைப் பரிசில் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இரு நாட்டு அமைச்சர்களும் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்டு அமைச்சர்களும் அரசியல், பொருளாதார அபிவிருத்தி, பாதுகாப்பு, கலாசாரம், தொழிலாளர் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடினர்

Related posts: