புதிய வைரசிற்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வளவு தூரம் பலனனிக்கும் என்பது உறுதியாக தெரியாதநிலை – முகக்கவசமே முக்கியம் – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி வலியுறுத்து!

Saturday, May 15th, 2021

புதிய வைரசிற்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வளவு தூரம் பலனனிக்கும் என்பது இன்னமும உறுதியாக தெரியாததால் பொதுமக்கள் முகக்கவசங்களை அணிவது அவசியம் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் தடுப்பூசிகள் நோய் தீவிரதன்மையை குறைத்து உயிரிழப்பை ஏற்படுத்துவதை மாத்திரம் உறுதி செய்கின்றன என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை பயன்படுத்தியவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நோயை பரப்பும் ஆபத்துள்ளது உள்ளதெனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கை சனத்தொகையில் 65 முதல் 70 வீதமான மக்கள் தடுப்பூசியை பெறும் வரை நாட்டில் பாதுகாப்பான சூழல் ஏற்படும் என தெரிவிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக முகக்கவசங்களை உரிய விதத்தில் அணிவது ஒருவரை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கின்றது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் கொரோனாவல் பாதிக்கப்பட்ட ஒருவர் ஏனையவர்களிற்கு நோயினை பரப்புவதை முகக்கவசம் தடுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: