புதிய வாகனங்கள் கொள்வனவு :மட்டுபடுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு புதிய வாகனங்கள் கொள்வனவு செய்வதை மட்டுபடுத்துமாறு அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அனைத்து அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் செயலளாரின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
தற்போது இருப்பில் காணப்படும் வாகனங்களை கணக்கிட்டு அவற்றை உரிய முறையில் நிர்வாகிப்பதற்கு அரசாங்கம் ஒரு பொறுமுறையையும் ஆரம்பித்துள்ளது.
புதிய வாகனம் கொள்வனவு அவசியமாக தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அது குறித்து ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் ஜனாதிபதி செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
Related posts:
வலி.வடக்கில் மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது காணிச் சுவீகரிப்பு !
புள்ளிகள் பொறிமுறையுடன் சாரதி அனுமதிப் பத்திரம் அறிமுகம் - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
பாடசாலை மாணவருக்கான பருவச் சீட்டு 26 ஆம் திகதிமுதல் வழங்கப்படும் - இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு...
|
|