புதிய மாணவர்களை தேசிய கல்வியற் கல்லூரிக்கு இணைத்துக்கொள்ளும் வர்த்தமானி 9 ஆம் திகதி வெளிவரும்!
Monday, September 5th, 2016
இலங்கை தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 9 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குறித்த அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியுமென கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி 17 பாடநெறிகளுக்கு 4000 மாணவர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
இலங்கையில் நியூஸிலாந்து உயர்ஸ்தானிகராலயம் அமைக்கப்படும்!
ஏப்ரல் 21 தாக்குதல்: வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.!
சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி நீக்கத்தைத் தொடர்ந்து அரிசி விலை குறையும் என அரசாங்கம் எதிர்பார்ப்ப...
|
|
|


