புதிய அரசிலமைப்பு இடைக்கால அறிக்கை பேரவையில் முன்வைப்பு

Thursday, September 21st, 2017

புதிய அரசியல் அமைப்பு யாப்பை உருவாக்குவதற்காக பொருட்டு அமைக்கப்பட்ட, அரசியல் யாப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முற்பகல் அரசியல் அமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றையதினம் அரசியல் அமைப்பு பேரவை சபாநாயகர் தலைமையில் கூடியது.இதன்போது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை ஒரே ராஜ்ஜியத்தின் கீழ் செயற்படவுள்ளதாக முதற்பந்தியில் குறிப்பிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அதிகார பரவல் தொடர்பான யோசனையும் குறித்த அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பில் அடுத்த மாதம் விவாதிக்க உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

Related posts:


அடிப்படை தேவைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு வலியுறுத்தி திருநெல்வேலிப் பொதுச் சந்தை வியாபாரிகள் எதி...
விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு தவணைப் பரீட்சைகளில் இனி போனஸ் புள்ளி - கல்வி அமைச்சு அறிவிப்பு!
12 வயதிலிருந்து தடுப்பூசியை வழங்க அமைச்சர் கெஹலிய இணக்கம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்ப...