புதிய அரசின் முதல் பாதீட்டில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு!

Sunday, August 2nd, 2020

நாட்டின் பல மாவட்டங்களில் மக்கள் முகங்கொடுத்து வரும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களில் ஜனாதிபதி நாடு பூராகவும் மேற்கொண்ட விஜயங்களின்போது மக்கள் குடிநீர் பிர்சினை தொடர்பில் அதிகளவு முன்வைத்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் இப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அதனடிப்படையில் மிக முக்கிய தேவையாக கருதி குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: