புகையிரத பணிப்புறக்கணிப்பு இரத்து!

Tuesday, May 23rd, 2017

புகையிரத சாரதிகள் சங்கம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

புகையிரத சாரதிகள் மற்றும் உதவியாளர்களை சேர்த்துக்கொள்ளும் திருத்த நடைமுறை, போட்டி பரீட்சையின் ஊடாக சேவையில் சேர்த்துக்கொள்ளல் உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டிருந்ததாக லோகோமொட்டிவ் ஒபரேட்டின் பொறியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க தொடம்கொட தெரிவித்தார்.

எனினும் புகையிரத பொது முகாமையாளர் இந்த கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்ததன் காரணமாக பணிப்புறக்கணிப்பை இரத்து செய்ய தீர்மானித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts: