பிராணவாயுவை எடுத்துவர சென்னை நோக்கி பயணமானது சக்தி!

Tuesday, August 17th, 2021

இந்தியாவிடம் கொள்வனவு செய்யபட்ட ஒட்சிசன் தொகையை இலங்கைக்கு எடுத்துவருவதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி எனும் கப்பல் இன்று (17) அதிகாலை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சென்னை நோக்கி பயணித்துள்ளது.

கொவிட் தொற்றாளர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிப்பதற்காக இந்தியாவிடம் இருந்து ஒரு தொகை ஒட்சிசன் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் குறித்த கப்பல் நாளை (18) மாலை இந்தியாவை சென்றடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசனின் அளவு எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது என விஷேட வைத்திய ஆனந்த விஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இரவு வரையில் அவசர சிகிச்சை பிரிவுகளில் கொவிட் தொற்றாளர்கள் 188 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளர்களுக்காக ஒரு நாளைக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: