பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரரின் உயிருக்கு அச்சுறுத்தல்!

Sunday, June 3rd, 2018

இலங்கையின் பிரபல டெஸ்ட் கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரத்மலானை பிரதேசத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு ஒன்று அவரைப் படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அண்மையில் தனஞ்சயவின் தந்தை ரஞ்சன் டி சில்வா பாதாள உலகக்குழுவினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இந்த படுகொலை பாதாள உலகக்குழுவின் தலைவர் அஞ்சு என்பவரினால் திட்டமிடப்பட்டது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 19ஆம் திகதி அங்குலான பிரதேசத்தில் பாதாள உலகக்குழு தலைவர் அஞ்சுவின் சகாக்கள் 7 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்திருந்தனர். இவர்களின் மறைவிடம் பற்றிய தகவல்களை தனஞ்சவின் சகோதரர் சசித்ரா சில்வா வழங்கியதாக கருதி, அவரை படுகொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அவரைப் பழிவாங்கும் நோக்கில் அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் தனஞ்சவின் தந்தை கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த கொலை தொடர்பில் மூன்று பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts: