பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியதை வரவேற்றுள்ள சீனா!

Wednesday, February 12th, 2020

பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் இலங்கை பல நன்மைகளைப் பெற்றுக்கொண்டது என்று இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்தை சீனா வரவேற்றுள்ளது.

சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் செங் சுவாங் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் இலங்கை பல பில்லியன் டொலர்கள் நன்மைகளை பெற்றுள்ளது என்ற கருத்தை மஹிந்த ராஜபக்ச தமது இந்திய விஜயத்தின்போது தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள சீனாவின் பேச்சாளர், இலங்கைக்கு சீனா நட்பு ரீதியான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.

இந்த உதவிகள் யாவும் இலங்கையின் கட்டமைப்புகளையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் முகமாகவே வழங்கப்பட்டு வருகிறது என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts:

அபராத தொகையை செலுத்த முடியாது சிறையிலுள்ள கைதிகளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க நடவடி...
வறட்சியான வானிலை : நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் பாதிக்கப்படும் – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால...
ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை - தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் அச்சம் என சர்வத...