பிரதமரின் ஆலோசனைக்கு அமைய இன்றுமுதல் திரையரங்குகள் மீள் திறப்பு!

Friday, January 1st, 2021

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இன்றையதினம்முதல் நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகள் மீளவும் திறக்கப்பட்டுள்ளன.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இற்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் உள்ள திரையரங்குகள் இன்றுமுதல் மீள திறக்கப்படுகின்றன.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளமையினால் கலைத்துறைக்கும், கலைஞர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் உள்ளிட்ட கலைஞர்கள் பலர் சமீபத்தில் பிரதமருக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

அதன் பிரதிபலனாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்து திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும் என பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

திரையரங்குகளை திறக்கும்போது குறித்த திரையரங்குகள் உரிய முறையில் தொற்றுநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய பிரதமர், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்படங்களை பார்வையிடுவதற்கு திரையரங்குகளுக்கு வருகைத் தருவோரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: