புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை !

Tuesday, February 21st, 2017

500 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியரிமை வழங்கப்பட்டுள்ளது. 25,000 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும்  வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு தாய் நாட்டுக்கு சேவையாற்ற இவ்வாறான ஓர் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் எஸ்.பி நாவீன்ன தெரிவித்துள்ளார்.

சில தசாப்தங்களாக தங்களது தாய் நாட்டுக்கு சேவையாற்ற புலம்பெயர் சமூகத்திற்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் தங்களது அந்த நாடுகளின் நண்பர்களுக்கு இலங்கை பற்றி நல்லவிதமாக எடுத்துரைக்க வேண்டுமெனவும்  இவ்வாறு பிரச்சாரம் செய்வதன் மூலம் குறிப்பாக இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக இலங்கையை விட்டு சிலர் புலம்பெயர்ந்திருக்கலாம் எனவும், அரச பயங்கரவாதம் இடம்பெற்ற காலங்களில் அதற்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ள அவர் ஆசியாவில் வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.

 625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: