பாடசாலை மட்டத்திலிருந்து நல்லிணக்கம்ஏற்படுத்தப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!

பாடசாலை மட்டத்திலிருந்து நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் குறித்த விடயங்கள் பாடசாலைகளின் பாடவிதானத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் நல்லிணக்கம் பற்றிய விடயங்களை பாடவிதானத்தில் உள்ளடக்குவது குறித்து தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க அலுவலகம், கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு, கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறான சமுக பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறோம் என்பது தொடர்பில் ஆழமான ஆய்வு அவசியப்படுகிறது எனவும்,இதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
இன்று ஆரம்பமாகும் ஆசிய ஒத்துழைப்பு மாநாடு!
யாழில் வீடொன்றில் பெருமளவு போதைப்பொருள்கள் மீட்பு!
பொருளாதார நெருக்கடிக்கு சட்டத்தின் ஆதிக்கம் சீர்குலைந்தமையும் காரணம் - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச...
|
|
வடக்கு மருத்துவர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் - மருத்துவ அதிகாரிகள் சங்...
மரபுரிமை மையங்களை பாதுகாத்தல்; ‘14 இல் ஈ.பி.டி.பி நிறைவேற்றிய தீர்மானத்தை ’20 இல் மீளக்கொண்டுவந்தது ...
சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பப்படிவங்களை தமிழ் மொழியில் பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை - நீதி அம...