பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மீள திறக்க அனுமதி – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, September 9th, 2020

பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் நடவடிக்கை மற்றும் பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலைகளை மீளத் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினருக்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், சுகாதார வழிகாட்டலின் கீழ் எதிர்வரும் 14 ஆம் திகதிமுதல் பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கும் சிற்றுண்டிச் சாலைகளை மீள திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இடைவேளை நேரத்தில் சிற்றுண்டிச் சாலையில் மாணவர்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பாடசாலை அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நேற்றுமுதல் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: