பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பினைத் துண்டிக்க நடவடிக்கை – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Wednesday, March 30th, 2022

பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கான மின் இணைப்பினைத் துண்டிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மின்கட்டணத்தை செலுத்தாத வீடுகளின் பட்டியலை சேகரித்து அந்த நபர்களின் மின்சார இணைப்புகளை துண்டிக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல வீடுகளில் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று காரணமாக சில வாடிக்கையாளர்கள் பல மாதங்களாக கட்டணம் செலுத்தவில்லை. அவர்களுக்கு சில காலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபை கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், நிலுவைத் தொகையான மின்சார கட்டணத்தை மீளப் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: