பல்கலைச் சம்பவத்தை இனவாதமாக்கவேண்டாம் – பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண!

Sunday, July 17th, 2016

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை இனவாத மோதலாக சித்தரித்து நிலைமையை சிக்கலாக்க வேண்டாம் என்று பிரதியமைச்சர் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஊடக மற்றும் தகவல் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தனது பேஸ்புக் ஊடாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் மனவருத்தத்துக்குரியது. யாழ். பல்கலைக்கழகத்தை விட தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருப்பதாக நான் நினைக்கின்றேன்.

கடந்த வருடம் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் இணைந்து நடத்திய கலை விழா ஒன்றுக்கு நான் சமூகமளித்திருந்தேன். அங்கு அவர்களுக்கிடையே மோதல்கள் இல்லை.

எனவே இந்த சம்பவத்தை இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கவோ, இனவாத கண்ணோட்டத்தில் சித்தரிக்கவோ வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் அவர் தன் பேஸ்புக் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: