நீதிபதிகளின் அறிவு மற்றும் திறன்களை அதிகரிப்பதற்காக நீதித்துறை பயிற்சி கல்லூரியை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்!

Friday, July 23rd, 2021

இலங்கையில் நீதித்துறைப் பயிற்சிக் கல்லூரியை நிறுவுவதற்கான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, உயர் நீதிமன்ற நீதிபதி புவனேக அலுவிஹார தலைமையில், துறைசார் நிபுணர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீதிபதிகளின் நிறுவனம், இலங்கையிலுள்ள நீதித்துறைக்காக அமைந்துள்ள ஒரேயொரு கற்கை நிறுவனம் என்பதுடன், அதன்மூலம் – நீதிபதிகளுக்குப் போதுமான பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்காகவும், அவர்களது இயலளவை அதிகரிப்பதற்காகவும் கிடைக்கின்ற ஒத்துழைப்புக்கள் தொடர்பாக திருப்தியடைய முடியாதுள்ளது.

உலகில், நீதிபதிகளுக்குத் தேவையான கல்வியை வழங்குவதற்காகவும், அவர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்காகவும் – பல்கலைக்கழகத்திற்கு நிகரான வகையிலான வசதிகளுடன் கூடிய கல்வி நிறுவனங்கனங்கள் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி,சட்ட மறுசீரமைப்பு,மற்றும் இலத்திரனியல் மயப்படுத்தல் போன்றவற்றின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

அதே போல் – நீதிமன்ற நீதிபதிகளின் அறிவு மற்றும் திறன்களை அதிகரிப்பதற்காக, தேவையான வசதிகளை வழங்க வேண்டியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே – உயர் நீதிமன்ற நீதிபதி புவனேக அலுவிஹார தலைமையில், துறைசார் நிபுணர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: