காலத்தினால் செதுக்கப்பட்டவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – வை. தவநாதன் பெருமிதம்!

Thursday, July 15th, 2021

மக்கள் நலச் சிந்தனையாளர்களின் கரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவநாதன், காலத்தினால் செதுக்கப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆளுமையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தலைவர்கள் எனப்படுகின்றவர்கள் காலத்தினால் உருவாக்கப்படுகின்றார்கள்.

அவ்வாறு காலத்தினால் உருவாக்கப்பட்ட தலைவர்களில் ஒருவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எம் மத்தியில் காணப்படுகின்றார்.

குறிப்பாக, பனை தென்னை தொழில் துறையினைப் பொறுத்தவரையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெருக்கம் ஆழமானது.

தேசிய அரசியல் ஈடுபடுதற்கு முன்னர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்திலேயே குறித்த தொழில்துறைசார் வல்லுநர்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆழமான அக்கறையை வெளிப்படுத்தி வருகின்றார்.

அதன் தொடர்ச்சியாவே, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தில் நிர்வாக முறைகேடுகள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்ததும், அவை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தி, புதிய நிர்வாகத்தின் கைகளில் இந்தக் கூட்டுறவுச் சங்கம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இவ்வாறான மக்கள் நலனை முன்னிறுத்திச் செயற்படுகின்ற தலைவரின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் புதிய நிர்வாகம் மற்றும் பணியாளர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

Related posts: