பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான அனுமதி கைநூல் இன்று

Monday, January 16th, 2017

2016/2017 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி எதிர்வரும் 2ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாவதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2016/2017 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான அனுமதி கைநூல் இன்று வெளியிடப்படவிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தல் மற்றும் பதிவு செய்தல் இணையத்தளத்தின் மூலம் மாத்திரமே இடம்பெறும். அனுமதிக்கான கைநூலை இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

உயர்தரப்பரீட்சை பெறுபெறு வெளியான உடனே பல்கலைக்கழக மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகுமென்றும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா கூறினார்.

உயர்தரப் பரீட்சையில் விடைத்தாள்களை மீள மதிப்பீடுகள் வெளிவருவதற்கு முன்னர் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் பணி ஆரம்பிக்கப்படுமென்றும், இந்த பெறுபேறுகள் கிடைத்த பின்னர் அதற்கேற்ற வகையிலான மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் கணனி கட்டமைப்பு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பணிகள் துரிதப்படுத்தப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் கற்கை நெறிகளைத் தெரிவு செய்வதற்கு மாணவர்களுக்கு வசதியாக பாடசாலை உயர்தர வகுப்புகளைச் சேர்ந்த 350 ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது

சிங்களம் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தும் பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ் ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கை நாளை இடம்பெறும். இதற்காக கல்வி அமைச்சு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருப்பதாகவும் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார். இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது;

681c95ca2c140680383be2cbdc84c30a_XL

Related posts: